அமெரிக்கா: உக்ரைன் போரை நிறுத்த ரஷ்ய புதின் விதித்த 2 நிபந்தனைகளை ஏற்க சம்மதிப்பாரா உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதை அமெரிக்க அதிபர் டிரம்ப் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்து வருவது தெரிந்ததே. இதன் ஒரு பகுதியாக, சனிக்கிழமை அலாஸ்காவில் ரஷிய அதிபர் புதினை டிரம்ப் சந்தித்தார். இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் நடைபெற்றதாக இரு நாட்டுத் தலைவர்களும் அறிவித்தனர்.
ஆனால் போர் நிறுத்தம் குறித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை. போரை நிறுத்த புதின் பல நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பிறகு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.
போர் நிறுத்தத்திற்கு புதின் விதித்த முக்கிய நிபந்தனையை அவர் ஜெலன்ஸ்கியிடம் விளக்கினார். சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, உக்ரைன் மற்றும் ரஷியாவின் எல்லையில் உள்ள டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதியை ரஷியாவிடம் விட்டுவிட வேண்டும் என்றும் அவை தங்களின் முழு கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்றும் புதின் நிபந்தனை விதித்தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிபந்தனையை டிரம்ப் உக்ரைன் அதிபரிடம் விளக்கியபோது, ஜெலென்ஸ்கி தனது பிரதேசத்தை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இன்று (திங்களன்று) ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று டிரம்ப்-ஐ சந்திக்க உள்ளார். டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகள் இயற்கை வளங்கள் மற்றும் தொழில்துறை நிறைந்தவை. இங்கு எஃகு மற்றும் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகின்றன.
புவியியல் ரீதியாக இந்தப் பகுதிகள் உக்ரைனின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை தற்போது ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் 30 சதவீதப் பகுதி மட்டுமே உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்போது புதின் இந்தப் பகுதியையும் தங்களுடன் இணைக்க வேண்டும் என்று கோருகிறார்.