கியேவ்: ரஷ்யா எங்களை மட்டுமே காயப்படுத்துகிறது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நீண்ட காலமாக போர் நடந்து வருகிறது. இது குறித்து தனது புத்தாண்டு உரையில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ‘இந்த ஆண்டுக்குள் போரை முடிவுக்கு கொண்டு வர என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். இந்த ஆண்டின் ஒவ்வொரு நாளும் போதுமான பலத்துடன் நாம் போராட வேண்டும். இந்த ஆண்டு எங்கள் ஆண்டாக இருக்கும்.’
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில், ‘புத்தாண்டு தினத்தன்று கூட, உக்ரைனை காயப்படுத்துவதில் மட்டுமே ரஷ்யா ஆர்வம் காட்டுகிறது’ என பதிவிட்டுள்ளார்.