
வாஷிங்டன்: பாலஸ்தீன காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சண்டையிட்டு வருகின்றனர். காஸா பகுதியில் இதுவரை 44,282 பேர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், எகிப்து அரசின் சமரசத்தின் அடிப்படையில் இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எகிப்து அரசின் உயர்மட்டக் குழு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீதான தாக்குதலில் 254 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். இதில் 154 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 100 பேர் இன்னும் ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளனர். அவர்களை விடுவிக்க, இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,000 ஹமாஸ் போராளிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஹமாஸ் வட்டாரங்கள் கூறுகையில், “இஸ்ரேல் அரசு லெபனானுடன் நிபந்தனையற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. காஸாவிலும் போர் நிறுத்தத்தை அமல்படுத்த விரும்புகிறோம். ஆனால் இஸ்ரேல் அரசு போர் நிறுத்தத்தை விரும்பவில்லை” என்று அவர்கள் கூறினர். இதுகுறித்து அமெரிக்க அரசு அதிகாரிகள் கூறுகையில், “தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் பதவிக்காலம் ஜனவரியில் முடிவடைகிறது.
அப்போது காஸாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். விரைவில் இஸ்ரேல் அரசுக்கும் காசா நிர்வாகத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்றார். இதற்கிடையில், இஸ்ரேல் ராணுவத்திற்கும் லெபனான் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் தீவிரமடைந்தது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் மத்தியஸ்த முயற்சியால் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நேற்று முன்தினம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “எல்லைப் பகுதிகளில் இருந்து 40 கி.மீ., தொலைவில் ஹமாஸ் தீவிரவாதிகள் வெளியேற வேண்டும். அந்த பகுதிகளில் ஐ.நா அமைதி காக்கும் படையினர் நிறுத்தப்படுவார்கள். லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக வாபஸ் பெறப்படும். கடந்த 28-ம் தேதி அதிகாலை முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இருப்பினும், லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக வெளியேற சில நாட்கள் ஆகலாம். போர்நிறுத்தம் 60 நாட்களுக்கு அமலில் இருக்கும்,” என்றனர். லெபனான் அரசு வட்டாரங்கள் கூறுகையில், “போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். பெய்ரூட்டில் பெரும்பாலான வீடுகள் இடிந்து தரைமட்டமாகிவிட்டதால், புதிய வீடுகளை கட்டுவதற்கு சர்வதேச நாடுகளின் உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய வீரர்கள் முகாமிட்டுள்ளனர். போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில் நேற்று அடையாளம் தெரியாத சிலர் ஆயுதங்களுடன் அப்பகுதிக்கு வாகனத்தில் வந்தனர். அவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில், 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.