வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் வ்லாடிமிர் புடின், தன்னுடைய ஆட்சியால் உக்ரைனை முழுவதும் கைப்பற்ற முடியும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்பாக, கடந்த காலத்தில் அமெரிக்கா உக்ரைனை ஆதரித்து வந்தது. ஆனால், அமெரிக்காவின் ஆட்சி மாறிய பிறகு, நிலைகள் மாறி, டிரம்ப் ரஷ்யாவுடனான உறவை புதுப்பிக்க ஆர்வம் காட்டினார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றபோது, டிரம்ப் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை பகிர்ந்தார். குறிப்பாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீது அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஜெலன்ஸ்கியை அவர் சர்வதிகாரி என்று கூறி, அவர் இந்த போர் சம்மந்தமான பேச்சுவார்த்தையில் பங்கேற்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்திய கருத்துக்களில், டிரம்ப் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக கூறியிருப்பதாவது, “உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி பங்கேற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவருக்கு அங்கு வேலையே இல்லை” என்று கூறினார். மேலும், “ரஷ்ய அதிபர் புடின் நினைத்தால், உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற முடியும்” என்று அவர் வலியுறுத்தினார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது நிலைப்பாட்டை மாறாமல் பேச்சுவார்த்தைகளை நிறுத்தி, ஒப்பந்தங்களை செய்யாமல் இருந்ததைப் பற்றி டிரம்ப் கவலை தெரிவித்தார். “புடினை நல்லவராகவோ அல்லது சிறந்தவராகவோ மாற்ற முயற்சிக்கவில்லை” என்றும், “போரின் தொடக்கம் தவிர்க்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.