இஸ்லாமாபாத்: இந்தியா கொடி ஏன் இல்லை? என்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான மைதானத்தில் இந்தியக் கொடி இல்லை என்று சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), நான்கு கொடிகள் ஏற்றுவது மட்டுமே மரபு என்று தெரிவித்துள்ளது.
ஒன்று ICC, இரண்டு PCB (போட்டி நடத்துபவர்), மற்ற இரண்டும் அன்றைக்கு விளையாடும் அணிகள். ஆனால், அங்கு அனைத்து நாட்டு கொடிகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சர்ச்சை பெரிய அளவில் பூதாகரமாக வெடிக்கும் என்று விளையாட்டுப் போட்டிகளின் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.