அமெரிக்கா: அதானி நிறுவனத்தை குறி வைத்தது ஏன் என்று ஹிண்டன்பர்க் நிறுவனர் ஆண்டர்சன் விளக்கம் அளித்துள்ளார்.
ஹிண்டன்பர்க் நிறுவனத்தை மூடிய பிறகு, அதன் நிறுவனர் ஆண்டர்சன் அதானி குழுமத்தின் ஊழல்களை அம்பலப்படுத்தியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “நாங்கள் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சி மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதானி குழுமத்தை அம்பலப்படுத்துவது இந்திய பொருளாதாரத்துக்கு உதவும் என்று நினைத்தோம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்த பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.