டெல் அவிவ்: நெதன்யாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- கடந்த சில மாதங்களாக நம்பிக்கை இழந்துள்ளேன். இதனால், தற்போதைய ராணுவ அமைச்சரை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளேன். இது இஸ்ரேல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஸாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் சண்டையில் 43,300-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பெரும்பாலான பகுதிகள் சிதிலமடைந்துள்ளன. அக்டோபர் 7, 2023 அன்று, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலைத் தாக்கி, சுமார் 1,200 பேரைக் கொன்றனர் மற்றும் 251 பணயக்கைதிகளை காஸாவில் பிடித்தனர். இதன் பிறகு போர் தொடங்கியது. இதன் நீட்சியாக லெபனான் எல்லைக்குள் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பை அழிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலிய தாக்குதலில் லெபனானில் இதுவரை 3,002 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 13,492 பேர் காயமடைந்துள்ளனர்.
காசா மற்றும் லெபனான் ஆகிய இரு முனைகளிலும் இஸ்ரேலிய ராணுவம் முழு வீச்சில் தாக்குதல் நடத்திய சூழலில், பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெல்லனை பிரதமர் பதவி நீக்கம் செய்துள்ளார். தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் இஸ்ரேல் காட்ஸ், பாதுகாப்பு அமைச்சராக யோவ் கெல்லண்டிற்குப் பதிலாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் நாட்டின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக கிடியோன் சர் நியமிக்கப்பட்டுள்ளார். பதவி நீக்கம் குறித்து யோவ் கெலாண்ட் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவில், “இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே எனது வாழ்க்கையின் முக்கிய பணியாக இருந்தது… அது அப்படியே இருக்கும்” என்று உணர்ச்சிவசப்பட்டு பதிவிட்டுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட காசா மற்றும் லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.