வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதனால் டிரம்புக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். சில நாட்களுக்கு முன்பு, பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பேசும்போது, கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் டிரம்ப் மீது துப்பாக்கியால் சுட்டார், அதிர்ஷ்டவசமாக அவர் உயிருடன் தப்பினார். காதில் காயம் ஏற்பட்டது.
கொல்ல சதி
இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை கொல்ல ஈரான் சதி செய்ததாக அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. 2020 இல், ஈரானின் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றது. இதற்கு அப்போதைய அதிபராக இருந்த டிரம்ப் உத்தரவிட்டார்.
இதனால்தான் டிரம்பை கொல்ல ஈரான் சதி செய்து வருகிறது. அவர் சுடப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனால் டிரம்புக்கு பாதுகாப்பு அதிகரித்துள்ளது.
அச்சுறுத்தல்
தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறியதாவது: டிரம்பிற்கு எதிரான ஈரானின் அச்சுறுத்தல்களை நாங்கள் பல ஆண்டுகளாக கண்காணித்து வருகிறோம். காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் ஈரானின் முயற்சிகளில் இருந்து அச்சுறுத்தல்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என ஈரான் மறுத்துள்ளது.