புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஹைதராபாத் தொழிலதிபர் தொடர்ந்த வழக்கை விசாரணை செய்வதிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகினார். டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அரசின் மதுபானக் கொள்கை, 2021-22 திருத்தப்பட்டுள்ளது.
இந்த மோசடி குறித்து அமலாக்கத் துறையும், சிபிஐயும் விசாரணை நடத்தி வருகின்றன. முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடந்த பண மோசடி தொடர்பாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அபிஷேக் பாய்ன்பல்லி கைது செய்யப்பட்டார். 18 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கியது. அது தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது.
இந்நிலையில், பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அபிஷேக் பாய்ன்பாலி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி சஞ்சீவ் குமார் விலகினார். இதையடுத்து, 5ம் தேதிக்கு பிறகு புதிய அமர்வில் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை ஜாமீன் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. வழக்கிலிருந்து நீதிபதி விலகியதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.