திருச்சி: ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் திருச்சி மத்திய சிறையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அடைக்கப்பட்டார்.
சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கேரளாவின் திருச்சூரில் விஜயபாஸ்கரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் அவரை கரூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 6 மணி நேர விசாரணைக்குப் பிறகு விஜயபாஸ்கர் மற்றும் அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்ட பிரவீன் என்பவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து விஜயபாஸ்கர் திருச்சிக்கும், பிரவீன் குளித்தலைக்கும் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக நீதிமன்ற வளாகம், மருத்துவமனை வளாகத்தில் அதிமுக தொண்டர்கள் திரளாக நின்று கோஷம் எழுப்பினர். தன்மீதான வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எம்.ஆர்.விஜயபாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.