மதுரை: வெயிட் அண்ட் சீ… அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா? என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்கள். இதற்கு பதிலளித்த அவர், “Wait and See” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, “எங்கள் பொதுச்செயலாளர் சாணக்கியர். நாலரை ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தினார். பாரத பிரதமர் மோடியே தமிழக அரசை பாராட்டியுள்ளார்.
யானைக்கும் அடி சறுக்கும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவே தோற்றுள்ளனர். 2026ல் எடப்பாடி பழனிசாமியின் சாணக்கிய தனத்தை பார்ப்பீர்கள்” என்று கூறியுள்ளார்.