சென்னை; காலிஃப்ளவரில் பிரியாணி, சில்லி, பொரியல், குருமா எனப் பலவகையான ரெசிப்பிகள் செய்து ருசித்து இருப்போம். காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
காலிஃப்ளவர் – 1,
வெங்காயம்- 2,
மிளகு- 1 ஸ்பூன்
சீரகம்- 2 ஸ்பூன்
சோம்பு- அரை ஸ்பூன்,
பட்டை- 2
லவங்கம் – 2
பூண்டு- 2
இஞ்சி- 1
எலுமிச்சை சாறு- 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை: காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், அடுத்து காலிஃப்ளவரை சுடு தண்ணீரில் போட்டு லேசாக வேகவிட்டுக் கொள்ளவும்.
மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம் போன்றவற்றினைப் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும். அதேபோல் இஞ்சி- பூண்டு பேஸ்ட்டினையும் தண்ணீர்விட்டு மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் காலிஃப்ளவர், இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி அடுத்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.. இறுதியில் எலுமிச்சை சாறு கலந்து இறக்கினால் காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை ரெடி.