பாபநாசம்: தஞ்சை மாவட்டம் புனல்வாசல் மாணவர் விடுதி சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புனல்வாசல் மாணவர் விடுதி சாலையை சீரமைக்க கோரிக்கை
பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ளது புனல்வாசல் ஊராட்சி. இங்குள்ள முருகன் தெருவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் தங்கி படிக்கும் அரசு மாணவர் விடுதி உள்ளது.
பள்ளி வளாகத்தில் இருந்து மாணவர் விடுதிக்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலை மிகவும் சேதம் அடைந்து, சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களும் பலவருடங்களாக சிரமங்களை சந்தித்து சாலையை கடந்து செல்கின்றனர்.
எனவே, இனியும் தாமதிக்காமல் புனல்வாசல் ஊராட்சி முருகன் தெருவில் சுமார் 400 மீட்டர் நீளமுள்ள மாணவர் விடுதிக்கு செல்லும் மண் சாலையை தார் சாலையாக தரம் உயர்த்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.