
பஞ்சாப் மாநிலம், அதன் அண்டை மாநிலமான ஹரியானாவுக்கு நீர் பகிர்ந்துகொள்கை ஒப்பந்தத்தின் கீழ் நீண்ட காலமாக தண்ணீர் வழங்கி வந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் குடிநீர் தேவைக்காக ஹரியானா கூடுதலாக தண்ணீர் அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் தங்களிடம் நீர்மூலம் குறைவாகவே உள்ளதாகக் கூறி பஞ்சாப் அரசு அந்த கோரிக்கையை மறுத்தது.

இதையடுத்து மத்திய அரசு மற்றும் ஹரியானா அரசு இணைந்து, பஞ்சாபில் இருந்து ஹரியானாவுக்கு நீர் திறக்க பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் கூட்டத்தை கூட்டி தீர்மானம் மேற்கொண்டன. இந்த முடிவுக்கு பஞ்சாப் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டசபையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் பரிந்தர் குமார் கோயல், “ஒரு சொட்டு கூட கூடுதலாக ஹரியானாவுக்கு தண்ணீர் தரமாட்டோம்” என்ற தீர்மானத்தை கொண்டு வந்து சட்டசபையில் நிறைவேற்றினார்.
தற்போது பஞ்சாபில் உள்ள விவசாய நிலங்களுக்கு கால்வாய்கள் மூலம் தண்ணீர் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் 6ஆம் தேதி பஞ்சாப், ஹரியானாவுக்கு 4,000 கனஅடி தண்ணீரை மனிதாபிமானக் காரணமாக வழங்கியது. ஆனால் தற்போது ஹரியானா 8,500 கனஅடி தண்ணீர் தேவைப்படுவதாகக் கூறியுள்ளது. இதனை வழங்க முடியாது என பஞ்சாப் அரசு மீண்டும் உறுதியாக மறுத்துள்ளது.