போர்ட் லூயிஸ்: நமது நாட்டின் நிதியுதவியுடன் மொரிஷியஸில் கட்டப்பட்ட நவீன மருத்துவமனையை நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று திறந்து வைத்தார்.
நேற்று நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள தீவு நாடான மொரீஷியஸ் சென்றார். அவரை பிரதமர் பிரவீன் ஜெகநாத் வரவேற்றார்.
அதன்பின், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை வலுப்படுத்துவது, உணவு, மருந்து வழங்கும் சஹர் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது, ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.
இந்நிலையில், மொரிஷியஸ் நாட்டில் உள்ள கிராண்ட் பாய் பகுதியில் நமது நாட்டின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட மருத்துவமனையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “இந்த மருத்துவமனை நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் நமது நாட்டின் பங்களிப்பை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இது இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவின் புதிய வெளிப்பாடாகும்,” என்றார்.