புதுடில்லியில் இருந்து கிடைக்கும் தகவலின்படி, பாகிஸ்தான் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் படங்கள் தற்போது செயற்கைக்கோள் மூலம் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல் மே 7ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் 1:30 மணி வரை 25 நிமிடங்களில் நடந்தது. பாக் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இயங்கிய 9 பயங்கரவாத முகாம்கள் இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலின் தாக்கத்தை புதிய செயற்கைக்கோள் படங்கள் தெளிவாக காட்டுகின்றன.இந்த படங்களில், பயங்கரவாத முகாம்கள் நிலவிய இடங்களில் ஏற்பட்ட சேதம் காணப்படுகிறது.
குறிப்பாக பாகிஸ்தானின் பஹாவல்பூர் பகுதியில் உள்ள ஜாமியா மசூதி மற்றும் முரிட்கே நகரில் பயங்கரவாதிகள் பதுங்கிய இடங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவத்திற்கு நாட்டு முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறியீட்டுப் பெயரில் நடந்த இந்த தாக்குதல், இந்தியாவின் பாதுகாப்பு துறையின் துல்லியத்தையும் திட்டமிடும் திறனையும் உலகிற்கு காட்டுகிறது.
இந்த தாக்குதலால் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது. செயற்கைக்கோள் படங்களில் பரந்தளவிலான சேதம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தின் துல்லியமான தாக்குதல்கள் எதிரிகளின் சதித் திட்டங்களை முறியடித்துள்ளன.இந்த செயற்பாட்டின் முக்கிய அம்சம் யாரும் எதிர்பாராத நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலாகும். ராணுவத்தின் இந்த வீரச் செயலால், நாட்டில் தேசிய பாதுகாப்பின் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது. பாதுகாப்பு வட்டாரங்கள் இந்த தாக்குதலால் எதிர்வினை செலுத்தும் வாய்ப்பு குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.இந்த தாக்குதல் இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக நிகழ்ந்துள்ளது. உலகம் முழுவதும் இந்த தாக்குதல் பற்றி ஆர்வமுடன் கவனம் செலுத்தி வருகிறது.