புதுடில்லி: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதாக அவரை அடுத்து 24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூரை அடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. 3 நாள் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை மாலை சமாதான ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
இதனிடையே தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதாக அவரை அடுத்து 24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. அவர் இந்திய அரசின் செயல்பாடுகளை உளவு பார்த்ததாக கூறப்படுகிறது.