By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகளாவிய ராணுவ செலவினம் 2887 பில்லியன் டாலரை எட்டியது
    1 Min Read
    110 கிலோ கஞ்சா கடத்தி வந்த 22 பௌத்த துறவிகள் கைது
    2 Min Read
    சிக்கன் கேம் போல் தான் அமையும்… கடல் வழி திறப்பு குறித்து கருத்து
    2 Min Read
    மெட்டா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு… என்ன தெரியுங்களா?
    1 Min Read
    அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
    பானிபூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பால் பரபரப்பு
    1 Min Read
    மிக சிறந்த மருத்துவ மூலிகை முடக்கத்தானால் ஏற்படும் நன்மைகள்
    2 Min Read
    மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய தர்பூசணி அளிக்கும் நன்மை
    1 Min Read
    ரம்பூட்டான் பழத்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொட்டுக்கடலையால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    அமோகமான மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள்
    1 Min Read
    நன்றாக தூங்குவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.. அதற்கான சிறந்த உணவுகள் விபரம்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மணி, கமல், ரஹ்மான் – நான்கு நான்கு நான்கு… த்ரிஷாவின் உரை இணையத்தில் வைரல்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > மணி, கமல், ரஹ்மான் – நான்கு நான்கு நான்கு… த்ரிஷாவின் உரை இணையத்தில் வைரல்!
சினிமா

மணி, கமல், ரஹ்மான் – நான்கு நான்கு நான்கு… த்ரிஷாவின் உரை இணையத்தில் வைரல்!

admin
Last updated: May 25, 2025 9:05 pm
By admin 2 Min Read
Share
SHARE

மணிரத்னம் இயக்கிய தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று வரை பேசப்படும் நிகழ்வாகி இருக்கிறது. இந்த விழாவில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் கலந்து கொண்டு சொன்ன சில விஷயங்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, ஊதா நிற உடையில் ஜொலித்த அவரது தோற்றமும், பேச்சும் ரசிகர்களை அலற வைத்துள்ளன.

விழாவில் பேசும் போது த்ரிஷா, “இந்தப் படத்தில் என் கதாபாத்திரம் இசையை மையமாக கொண்டது. படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பாசிட்டிவ் ஷேட்ஸ் இருக்கின்றன, அதே நேரத்தில் சில நெகட்டிவ் துளிகளும் காணப்படும்” என்றார்.

அதன் பிறகு, “விண்ணைத் தாண்டி வருவாயா” படத்துக்குப் பிறகு சிம்புவுடன் மீண்டும் இணைவது எப்போது என பலரும் கேட்டதை அவர் நினைவு கூறினார். “தக்லைஃப் ட்ரெய்லர் பார்த்ததும் சிம்புவுக்குத் தானே ஜோடி என கேட்கிறார்கள். ட்ரெய்லர் இரண்டு நிமிடம்தானே, படம் இரண்டு மணி நேரம். அதைப்பார்த்தால்தான் புரியும்” என கூறியதும் கூட்டத்தில் அனைவரும் கைதட்டினார்.

மேலும் த்ரிஷா, “நான் மணிரத்னம் சார் இயக்கிய நான்கு படங்களில் நடித்திருக்கிறேன். கமல் சார் உடன் நான்கு படங்கள், ஏ.ஆர். ரஹ்மான் சார் இசையமைத்த நான்கு படங்கள் என பல வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறேன். நான் தான் கமல் சார் கிட்ட இருந்து நிறைய கற்றுக்கிட்டேன்” என பெருமையாக கூறினார்.

இந்த உரையை கேட்ட ரசிகர்கள் உடனே “அக்கா கணக்கு தப்பா சொல்லீட்டீங்க, ரஹ்மான் சார் இசையில் ஏழு படங்கள், சிம்புவுடன் மூன்று முறை இணைந்திருக்கீங்க” என பதிவிட்டனர். ஆனாலும் த்ரிஷா தன்னம்பிக்கையுடன் பேசிய அந்த கணக்குப் பேசுபொருளாக மாறியது.

தக்லைஃப் பட விழாவில் த்ரிஷாவின் தோற்றம் ‘பொன்னியின் செல்வன்’ பட விழாவை நினைவூட்டியது. குந்தவையாக தனது பங்களிப்புக்குப் பிறகு, த்ரிஷாவின் நடிப்பு வாழ்வில் புதிய உயரங்கள் தொடக்கமடைந்தது என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

மேலும், த்ரிஷா ஒரு படத்திற்காக ரூ. 12 கோடி சம்பளம் பெற்றதாகவும், அதனால் தென்னிந்திய சினிமாவின் அதிகம் சம்பளம் பெறும் நடிகையாக வளர்ந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மணிரத்னம் இயக்கத்தில் ஒரே ஒரு படத்தில் கூட நடிக்க இண்டஸ்ட்ரியின் பலர் காத்திருக்க, த்ரிஷாவுக்கு நான்கு பட வாய்ப்புகள் கிடைத்திருப்பது அவரது தரத்தை கூறுகிறது. ஆனால், அவர் அதற்கேற்ற திமிர் இல்லாமல் எளிமையாகவே இருக்கிறார் என கமல் ஹாசன் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் தக்லைஃப் படத்தில் யாருக்குத் தான் த்ரிஷா ஜோடியாக இருக்கிறார் என்பது ரசிகர்களிடையே விவாதமாக உள்ளது. இதற்கான விடையை கண்டுபிடிக்க, ரசிகர்கள் ஜூன் 5ம் தேதி படம் வெளியாகும் நாளுக்காக காத்திருக்கிறார்கள். “எங்கள் த்ரிஷா மாதிரி யாரு மச்சான்” என இணையம் முழுக்க ரசிகர்களின் குரல் ஒலிக்கிறது.

You Might Also Like

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 11வது நிகழ்ச்சி நடுவர்கள் பாடகி சித்ரா, இமான்

தான் நடிக்கும் அடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் அமீர்கான்

மக்களின் பிரச்சினையை சரியான வழியில் கூறுவதுதான் கர படம்: நடிகர் தனுஷ் தகவல்

நடிகை திரிஷாவின் புதிய பதிவு வைரலாகிறது

வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றுகின்றனர்… நடிகை அனுகிரகா பரபரப்பு குற்றச்சாட்டு

TAGGED:Thug LifeTrishaகமல்மணி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 11வது நிகழ்ச்சி நடுவர்கள் பாடகி சித்ரா, இமான்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?