சென்னை: சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 11வது நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பாடகி சித்ரா மற்றும் இமான் ஆகியோர் தான் வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மிக அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். சீனியர்களுக்கு தனி ஷோ மற்றும் குழந்தைகளுக்காக தனி சூப்பர் சிங்கர் ஷோ நடத்தப்பட்டு வருகிறது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 11வது சீசன் விரைவில் விஜய் டிவியில் தொடங்க இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு அதற்கான ப்ரோமோ வெளிவந்திருந்தது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 11வது நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பாடகி சித்ரா மற்றும் இமான் ஆகியோர் தான் வருகிறார்களாம்.
தான் மீண்டும் நடுவராக வருவதை இமான் ட்விட்டரில் உறுதி செய்து இருக்கிறார். மேலும் ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது.