சென்னை: நடிகர் அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் ‘வாம்மா வாம்மா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதர்வா நடிப்பில் உருவாகி வரும் ‘இதயம் முரளி’ திரைப்படம் ஏற்கனவே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் ‘வாம்மா வாம்மா’ பாடல் வெளியிடப்பட்டது. நடிகர் தனுஷ் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் இந்த படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஜூலை 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நடிகர் முரளியின் நினைவாக ‘இதயம் முரளி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.