ஐதராபாத்: ராம் சரண் நடிப்பில் வெளியான ‘பெத்தி’ திரைப்படம் உலகளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
பிரபல இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள இப்படம், தற்போது உலகளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
2026-ஆம் ஆண்டில் இதுவரை வெளியான தென்னிந்திய திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படமாக ‘பெத்தி’ உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.