சென்னை: ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய நடிகை சமந்தா, சண்டைக் காட்சிகளில் நடித்தபோது ஏற்பட்ட சிரமங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
மயோசிடிஸ் நோயிலிருந்து மீண்டு மீண்டும் திரையுலகில் தீவிரமாக செயல்பட்டு வரும் நடிகை சமந்தா, தயாரித்து நடித்துள்ள ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது.
சென்னையில் நடைபெற்ற திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், சண்டைக் காட்சிகளில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
“நடனக் காட்சிகளை விட சண்டைக் காட்சிகளில் நடிப்பது எளிது. இந்தப் படத்தில் இயல்பான சண்டைக் காட்சிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது எனக்கும் பல காயங்கள் ஏற்பட்டன. இருந்தாலும் காட்சிகள் இயல்பாக அமைய முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினோம்” என்று சமந்தா கூறினார்.