முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சியில் கையெழுத்திட்டதால் மின்சாரம் மீதான அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பதாகவும், மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தை கேக் வெட்டி கொண்டாடினார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழக அரசின் மின்கட்டண உயர்வுக்கு மத்திய அரசின் அழுத்தமே காரணம் என்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு சுமையை ஏற்ற விரும்பவில்லை என்றும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த காலத்தில் மத்திய அரசின் உதய் ஈன் திட்டத்தில் கையெழுத்திடவில்லை என்றும் அவர் கூறினார்.