கர்நாடகா: நடிகர் கமலின் பேச்சை அரசியலாக்க வேண்டாம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வலியுறுத்தி உள்ளார்.
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சையாகி, ‘தக் லைஃப்’ படத்தின் கர்நாடக வெளியீட்டில் தடையாக உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார், இதை அரசியல் பிரச்னையாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தாம் எதிரிகள் அல்ல, அனைவரும் நண்பர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கன்னட மொழியின் நீண்ட வரலாறு கமலுக்குத் தெரியாது என முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தக் லைப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கமல் பேசும் பொழுது தமிழ் மொழியில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் நடிகர் கமலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் தமிழகம் முழுவதும் நடிகர் கமலுக்கு பெரும் ஆதரவு குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.