மும்பை: முகேஷ் அம்பானி 122 பில்லியன் டாலர் (ரூ. 10 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார், மேலும் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11வது இடத்தைப் பிடித்துள்ளார்.
சமீபத்தில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது. திருமண செலவு ரூ.5,000 கோடி என கூறப்படுகிறது. அம்பானியின் வீட்டுப் பணியாளர்களான சமையற்காரர்கள், காவலர்கள், வீட்டு பராமரிப்புப் பணியாளர்களுக்கு கணிசமான சம்பளம் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக, கார் ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24 லட்சம் ஊதியம் வழங்கப்படுவதாக கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, ஓட்டுநர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. இது பல தனியார் நிறுவனங்களில் உள்ள மூத்த அதிகாரிகளின் சம்பளத்தை விட அதிகம். சவாலான நேரங்களிலும் வாகனத்தை மிகவும் பாதுகாப்பான முறையில் ஓட்டுவதற்கு பயிற்சி பெற்ற பிறகே பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
அம்பானி குடும்பத்தினர் பயன்படுத்தும் கார்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அம்பானியின் அனைத்து வாகனங்களும் புல்லட் புரூப் என்பது குறிப்பிடத்தக்கது.