பாட்னா: பீகார் தேர்தலில், பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கும், ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், தேஜஸ்வி யாதவ் நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தற்போது முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளார். அவர் ஒரு திறமையற்ற முதல்வர். அவரால் தனது கட்சி வேட்பாளர்களை கூட தேர்வு செய்ய முடியவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவருக்குப் பதிலாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய உள்ளார்.

பீகாரில், மெகா கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டு வந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு தற்போது அந்தத் திட்டங்களை அடக்கி செயல்பட்டு வருகிறது. 7 மாதங்களுக்கு முன்பு நாங்கள் அறிவித்த அனைத்து அறிவிப்புகளையும் செயல்படுத்துவது போல் அவர்கள் செயல்படுகிறார்கள். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.