வால்பாறை: வால்பாறை அம்மா படகு இல்லத்தில் துர்நாற்றம் வீசிய பகுதிகளில் தூய்மைப்பணி மேற்ொள்ளப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பகுதிக்கு உட்பட்ட வால்பாறை அருகில் உள்ள பொழுதுபோக்கு இடமாக அமைந்துள்ள அம்மா படகு இல்லம் கன மழையில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அடித்து வரப்பட்டு படகு இல்லத்தில் துர்நாற்றம் வீசி வந்தது.
இதையடுத்து வால்பாறை நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் கழிவு நீர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதால் தொற்று பரவும் அபாயமும் கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால் நகராட்சி மற்றும் தூய்மை பணியாளர்கள். சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
இதனால் வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்கு வழியில்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.