ரஷியா: ரஷியாவில் பிரிவினைவாதத்தை மேற்கத்திய நாடுகள் ஊக்குவிக்கின்றன என்று அதிபர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.
யூரேசியன் பொருளாதார யூனியன் (EAEU) மாநாட்டில் கலந்து கொண்ட ரஷியா அதிபர் புதின், ரஷியாவில் பிரிவினைவாதத்தை மேற்கத்திய நாடுகள் ஊக்கப்படுத்தியதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக புதின் கூறியதாவது:-
ஐ.எஸ். (Islamic State), ரஷியாவுக்கு எதிராக செயல்படும் வரை யாரும் அதன்மீது கவனம் செலுத்தவில்லை. மாஸ்கோவில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இன்னும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. யாரும் இதில் கவனம் செலுத்த விரும்புவதில்லை. ரஷியாவிற்கு எதிராக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் என்று விரும்பினர். நமது நாட்டில் பிரிவினைவாதத்தை கூட்டு மேற்கத்திய நாடுகள் ஊக்குவித்தபோது, பயங்கரவாதம் போன்ற தாக்குதல் நடத்த அது ஒரு கருவியாக இருந்தது. இவ்வாறு தெரிவித்தார்.