தற்போது அதிகம் பேர் ஆரோக்கிய உணவுகளைவிட துரித உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உண்பதால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது. ஆனால் நம் அன்றாட உணவுகளில் சில இயற்கையான ப்ரீபயாடிக் சேர்மங்கள் இருக்கின்றன, அவை குடலில் நன்மை பயக்கும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து செரிமானத்தை மேம்படுத்துகின்றன. NHS அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கரண் ராஜன் கூறுவதாவது, சமையலறையில் இருக்கும் சில எளிய உணவுகள் ப்ரீபயாடிக் ஆக செயல்பட்டு குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.

வாழைப்பழம் போன்ற பழங்களில் உள்ள பிரக்டூலிகோசாக்கரைடுகள் பெருங்குடலில் கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது, இது எலும்புகளுக்கு முக்கியமான சத்தாகும். சமைத்த உருளைக்கிழங்கில் அதிக எதிர்ப்பு சக்தியுள்ள ஸ்டார்ச் உள்ளதால், இது இன்சுலின் உணர்திறன் மற்றும் பசியை கட்டுப்படுத்துகிறது. ஆப்பிள் பழத்தில் இருக்கும் கரையக்கூடிய ப்ரீபயாடிக் பெக்டின் மற்றும் நார்ச்சத்துக்கள் குடல் நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கு உதவி செய்கின்றன.
ஓட்ஸ் அதிக கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் கொண்டதாகவும், சிறுகுடலில் கொழுப்பை குறைக்கும் ப்ரீபயாடிக் பீட்டா-குளுக்கன் கொண்டது. கொண்டைக்கடலை அதிக ஃபைபர் உள்ள உணவாகியதால் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் குடல் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. பூண்டு, வெங்காயம் போன்ற உணவுகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன; அவற்றை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் நன்மை பயக்கும் நுண்ணுயிர்களின் வளர்ச்சி மேம்படும்.
சூரியகாந்தி விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாகும். இதில் உள்ள லிக்னான்கள் மற்றும் செல்லுலோஸ் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்து செரிமான மண்டலத்தை ஒழுங்குபடுத்துகின்றன. இவ்வாறு ப்ரீபயாடிக் உணவுகளை அன்றாட உணவில் சேர்ப்பதால் குடல் ஆரோக்கியம் மேம்பட்டு உடல் நலமும் பாதுகாக்கப்படும். இந்த இயற்கை வழிகளைக் கடைபிடிப்பதன் மூலம் நம் உடல் இயல்பான முறையில் செயல்படும் சூழலை உருவாக்க முடியும்.