சென்னை: அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, கிச்சா ரவி ஆகியோர் நடிக்கும் ‘பாம்’ திரைப்படம். ஜெம்பிரியோ பிக்சர்ஸ் சார்பாக சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளனர். பி.எம். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இமான் இசையமைத்துள்ளார்.
மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிருஷ்ணன் மற்றும் விஷால் வெங்கட் ஆகியோர் இணைந்து கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர். விஷால் வெங்கட் ‘சில நேரங்களில் சில மக்கள்’ படத்தை இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:- இது உலகின் எந்த மூலையிலும் எளிதாக நடக்கக்கூடிய கதையுடன் முழு நீள நகைச்சுவை படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குறிப்பிடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால், நாங்களே ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கினோம். படம் அதில் உள்ள ஒரு ஊரில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டுள்ளது.
கடவுளை நம்பும் ஒரு குழுவிற்கும், கடவுளை நம்பாத ஒரு குழுவிற்கும் இடையிலான மோதலால் பிரிக்கப்பட்ட ஒரு நகரத்தை இரண்டு நண்பர்கள் எவ்வாறு ஒன்றிணைக்கிறார்கள் என்பதுதான் திரைக்கதை. அர்ஜுன் தாஸ் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் நண்பர்களாக நடிக்கின்றனர். படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது.