திருக்கடையூரில் தனது மாமனாருக்கு நடைபெற்ற விஜய ரத சாந்தி விழாவில் நடிகை நிக்கி கல்ராணி பங்கேற்றார். கோலிவுட்டில் ரீல் ஜோடியாக இருந்து நிஜ ஜோடியாக மாறியவர்கள் ஆதி-நிக்கி கல்ராணி. மரகத நானாகத்தில் ஜோடியாக நடித்த இவர்கள் பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் 2022-ம் ஆண்டு நடந்தது.நடிகை நிக்கி கல்ராணி திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிவிட்டார்.
இந்நிலையில் நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி தம்பதியினர் குடும்பத்துடன் மயிலாடுதுறை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். நடிகர் ஆதியின் தந்தையும் பிரபல தெலுங்கு பட இயக்குநருமான ரவிராஜா பினிசெட்டியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அங்கு சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி நிக்கி கல்ராணியின் மாமனார், மாமியார் ஆகியோருக்கு விஜய ரத சாந்தி விழாவும் நடைபெற்றது. இதையொட்டி, குருக்கள் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், துரிவ ஹோமம், மிருதுஞ்சிய ஹோமம் போன்ற ஹோமங்களை நடத்தினர். பின்னர், ஆதியின் பெற்றோர் மாலைகளை மாற்றி, புனிதநீர் அடங்கிய கலசத்தை ஏந்தி கோயிலை வலம் வந்தனர்.
பின்னர் இருவரையும் பிரகாரத்தில் உட்கார வைத்து கலசத்தில் இருந்த புனித நீரால் ஆதி, நிகி கல்ராணி ஆகியோருக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் சாமி சன்னதியில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ஆதி, நிக்கி கல்ராணி தம்பதியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.