தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து மசித்தது)
சிறிய வெங்காயம் – 1 கப்
தக்காளி – 1
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணைய் – 5 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – சிறிதளவு
கறிவேப்பிலை
செய்முறை:
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலையை போட வேண்டும். பின்னர் வெங்காயம் சேர்த்த சிறிது நேரம் கழித்து தக்காளியை சேர்க்க வேண்டும்.
3 நிமிடத்திற்குப் பிறகு உப்பு , உருளைக்கிழங்கை சேர்த்த பின்னர் சீரகம் ,சோம்பு ,தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைத்த மசாலாவை ஊற்றி வேக வைக்க வேண்டும். மீதம் உள்ள எண்ணெயை சேர்த்த பின்னர் 2 நிமிடம் வைத்து இறக்கினால் உருளைக்கிழங்கு பால் கறி ரெடி.