புதுடில்லி: இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு செல்வோர் வருமான வரி அனுமதி சான்றிதழ் பெறுவது பட்ஜெட்டில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது .
வரும் அக்டோபர் 1 முதல், இந்தியாவில் வசிக்கும் எவருக்கும் வெளிநாடு செல்லும் முன்பு கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் அவர்கள் கணக்குகள் தெளிவாக இருப்பதை உறுதிப்படுத்தும் அனுமதிச் சான்றிதழ் தேவைப்படும்.
அந்த நபருக்குச் செலுத்தப்படாத நிலுவை வரிகள் எதுவும் இல்லை அல்லது நிலுவைத் தொகையைச் செலுத்த ஏற்பாடு செய்துள்ளார் என்பதை இந்த சான்றிதழ் உறுதிப்படுத்துகிறது.