புற்றுநோய் வராமல் தடுக்கிறது
கடுகு எண்ணெயில் புற்றுநோயைத் தடுக்கும் பொருட்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக வயிறு மற்றும் குடல் புற்றுநோயிலிருந்து நம்மை காக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த எண்ணெயில் உள்ள குளுக்கோஷினோலேட் தான்.
வலியை குறைக்கிறது
கடுகு எண்ணெய் ஒரு சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் வாதநோய் மற்றும் ஆர்த்ரைடிஸ் பிரச்னைகளை தடுக்கிறது.
வாய் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
பல் சொத்தை மற்றும் பற்களின் வலிமைக்கு இந்த எண்ணெய் பெரிதும் உதவுகிறது. வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது. மேலும் பல் இடுக்குகளில் படிந்திருக்கும் கசடுகளை நீக்குகிறது. இது பற்களை வெண்மையாக்குவதோடு, பல்வலி மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவற்றிலிருந்து காக்கிறது.
சளி மற்றும் இருமல் நீங்ககடுகு எண்ணெயை சமையலில் பயன்படுத்துவது மூலம் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுவிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இது உடல் சூட்டை ஏற்றி சளியை இளகச் செய்து சுவாசப் பாதை வழியாக எளிதாக வெளியேற்றிவிடுகிறது. இதிலுள்ள பொருட்கள் சளி, இருமல் மற்றும் நோய்த்தொற்று போன்றவற்றை குணப்படுத்துகிறது. சைனஸ், ஆஸ்துமா போன்றவற்றிற்கும் மருந்தாக செயல்படுகிறது. மேலும் இந்த எண்ணெய் நமது உடலில் உள்ள வியர்வை சுரப்பியை அதிகரித்து காய்ச்சலால் ஏற்படும் அதிகப்படியான வெப்பநிலையை குறைத்து காய்ச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.