சென்னை: மிளகு காரச் சட்னி அருமையான சுவையில் தயார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தக்காளி – 5 (பெரியது)
காய்ந்த மிளகாய் – 5
மிளகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 3/4 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
நல்லெண்ணெய் – 2 குழிக்கரண்டி
கடுகு, உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 கைபிடி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை: முதலில் தக்காளியை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், காய்ந்த மிளகாயை போட்டதும் அடுப்பை அணைத்து விடவும்.
அதன் பிறகு மிளகை சேர்த்து உடனே கிளறி எடுத்து விடவும். பின் வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். அதன்பிறகு மீண்டும் அடுப்பை எரியவைத்து அதில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, பெருங்காயம் தூவி, உப்பு சேர்த்து போட்டு தக்காளியை நன்கு குழைய வதக்கி கொள்ளவும்.
பின்பு வதங்கியவற்றை ஆறவைத்து நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த சட்னியில் கொட்டி கலந்து இறக்கவும்.
இப்போது சுவையான மிளகு கார சட்னி தயார். இதை இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்