டமாஸ்கஸ்: சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தெற்கு சிரியாவின் ஸ்வீடா பகுதியில் சிறுபான்மை ஷியா பழங்குடியினரான ட்ரூஸ் போராளிகளுக்கும், சன்னி பெடோயின் பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயுத மோதல்கள் தொடங்கின. உலகில் சுமார் ஒரு மில்லியன் ட்ரூஸ் மக்கள் உள்ளனர், அவர்களில் பாதி பேர் சிரியாவில் உள்ளனர்.
இந்நிலையில் சிரியாவில் உள்ள ட்ரூஸ் மக்களைப் பாதுகாப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.