கூட்டணியில் இடம் பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோரை திருப்திப்படுத்தும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து சென்னை உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆந்திராவின் அமராவதி நகரின் வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடியும், பீகார் மாநிலத்திற்கு சிறப்பு திட்டங்களாக புதிய விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள், சாலைகள் அமைக்க ரூ.26,000 கோடியும் ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். . இதில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது.
இந்தியாவில் பீகார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும்தானா? மேலும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோரை திருப்திப்படுத்தும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் பாஜக அரசு தமிழகத்தை ஏமாற்றி வருவதாக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் முதல்வர் புறக்கணித்தார்.
இந்நிலையில், தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் மத்திய பட்ஜெட்டை புறக்கணித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய பாஜக அரசை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மத்திய பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை மேயர், திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பெண்கள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.