பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி கடந்த 2007ம் ஆண்டு பெங்க ளூரு ஊரக மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ராமநகரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினார்.
அப்போது டி.கே.சிவகுமாரின்சொந்த ஊரான கனகபுரா அந்தமாவட்டத்தில் இணைக்கப்பட்டது. தனது ஊரை மீண்டும் பெங்களூருவுடன் இணைக்க வேண்டும் என டி.கே.சிவகுமார் நீண்ட காலமாக முயன்று வருகிறார்.
இந்நிலையில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று அம்மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது ராமநகர் மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு மாவட்டம் என மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.