வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை அதனை ஊறவைத்து சாப்பிடுவது நல்லது. மேலும் வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரிலும் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. வெந்தய நீர் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது, இது மூட்டு அசௌகரியத்தை குறைக்கவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.
இதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும், வெந்தய நீர் ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது. நீங்கள் தினமும் ஒரு கிளாஸ் வெந்தய விதை தண்ணீரை குடித்து வந்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். அதுகுறித்து இங்கு விரிவாக காண்போம்.,
நெஞ்செரிச்சலை குணமாக்க :
வெந்தய தண்ணீரை தினமும் அருந்தி வந்தால் நெஞ்செரிச்சல் குணமாகும். வெந்தய விதைகள் குடல் உட்பகுதியில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி, நெஞ்செரிச்சலின் தீவிரத்தை குறைத்து, இயற்கையான ஆன்டாக்சிட் ஆக செயல்படுகிறது. குறிப்பாக வெந்தய தண்ணீர் இரைப்பை குடல் அழற்சியைப் போக்க உதவுகின்றன.
பொலிவான சருமம் :
வெந்தயத்தில் அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன, அவை சருமத்தை மென்மையாக்குகின்றன மற்றும் ஈரப்பதமாக்குகின்றன. வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம், கரோட்டின் மற்றும் வைட்டமின் சி தோல் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கிறது, பெட்ரோலியம் சார்ந்த லோஷன்கள் பயன்படுத்துபவர்கள் அதற்கு பதிலாக வெந்தய தண்ணீரை பயன்படுத்தலாம்.
எடை இழப்பு :
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக வெந்தய தண்ணீரை அருந்தலாம். வெந்தய தண்ணீரில் உள்ள அதிக நார்ச்சத்து இயற்கையாகவே பசியை அடக்கி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கிறது :
தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெந்தய விதை தண்ணீரைக் குடிப்பதால், இயற்கையாகவே இரத்த டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும். மேலும் விந்தணு எண்ணிக்கையையும் அதிகரித்து, டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டை நிவர்த்தி செய்ய உதவுகிறது. எனவே குழந்தையின்மை பிரச்சனை இருப்பவர்கள் தினமும் இந்த தண்ணீரை குடித்து வரலாம்.
நீரிழிவு நோயை நிர்வகிக்கிறது :
வெந்தய விதை தண்ணீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்வது டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறிகளைக் கணிசமாகக் குறைக்க உதவுகிறது. எனவே நீரழிவு நோயாளிகள் தாராளமாக வெந்தய தண்ணீரை அருந்தலாம்.முதல் நாள் இரவு ஒரு கைப்பிடி அளவு வெந்தயத்தை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து, அந்த தண்ணீரை மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்லது.