மேற்கு காற்றின் வேகத்தில் மாற்றம் காரணமாக புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு வங்கக் கடலில் நேற்று காலை, 08:30 மணிக்கு மேற்கு வங்கத்தை கடந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து, மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா பகுதியில் நிலவி வருகிறது. மேற்கு காற்றின் வேகத்தில் மாற்றம் காரணமாக புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் பலத்த மேற்பரப்பு காற்று மணிக்கு 30 – 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மலையோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 29-ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 30ஆம் தேதி முதல் 02ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° – 36° செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° – 28° செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° – 28° செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
மீனவர்களுக்கு ஓர் எச்சரிக்கை
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள்:
இன்று முதல் 31ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு கடலோர பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும், 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீசக்கூடும்.
வங்காள விரிகுடா பகுதிகள்:
28ஆம் தேதி மேற்கு வங்கக் கடலில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் அவ்வப்போது மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். தென்-மத்திய வங்கக் கடல், வடக்கு வங்கக் கடலின் தெற்குப் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல், வடக்கு ஆந்திரா கடற்கரைப் பகுதிகளில் சூறாவளி காற்றின் வேகம் மணிக்கு 35 முதல் 45 கிமீ மற்றும் அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
29ஆம் தேதி தென் மத்திய வங்கக் கடல், வடக்கு வங்கக் கடலின் தெற்குப் பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தென்மத்திய வங்கக் கடல் மற்றும் வடக்கு வங்கக் கடலில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றும் அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும்.
அரபிக் கடல் பகுதிகள்:
இன்றும் நாளையும் மத்திய அரபிக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதுடன் அவ்வப்போது மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்குப் பகுதிகள், வட கேரளா கர்நாடகா கடற்கரைப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவுகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
29 ஆம் தேதி மத்திய அரேபிய கடற்கரையில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் மற்றும் அவ்வப்போது மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்குப் பகுதிகள், கர்நாடகா கடற்கரையில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும்.
30 மற்றும் 31 ஆம் தேதிகளில் மத்திய அரேபிய கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றும் அவ்வப்போது மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்குப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும். மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.