தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு…
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2
முருங்கைக்கீரை – 1/2 கைப்பிடி பூரிக்கு.
கோதுமை மாவு – 2 கப்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
ஓமம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைகேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்சர் ஜாரில் சிறுதுண்டு இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் முருங்கைக்கீரையை எடுத்து, அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, 2 டீஸ்பூன் எண்ணெய், 1/2 டீஸ்பூன் ஓமம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு பிசைந்த மாவை 10 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து, பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ளதை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், முருங்கைக்கீரை பூரி தயார்.