புதுடில்லி: நாட்டின் உற்பத்தி சக்தியான ஓ.பி.சியின் வரலாற்றை வேண்டுமென்றே ஆர்எஸ்எஸ், பாஜக அழித்து விட்டன என்று எம்.பி., ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, இன்று நடைபெற்ற ஓபிசி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது: நாட்டின் உற்பத்தி சக்தியான ஓ.பி.சியின் வரலாற்றை வேண்டுமென்றே ஆர்எஸ்எஸ், பாஜக அழித்து விட்டன. நாம் முன்னதாகவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாமல் போனது காங்கிரசின் தவறு அல்ல. என்னுடைய தவறு. தற்போது அதை சரி செய்துள்ளேன்.
ஓபிசிக்கள், தலித்கள், பழங்குடியினர் நட்டின் உற்பத்தி சக்திகள். ஆனால், அவர்கள் அதற்கான பலனை பெறவில்லை. ஓ.பி.சி.க்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அளவுக்கு என்றால் பாதுகாக்க முடியவில்லை. என்னுடைய எண்ணம் நாட்டின் உற்பத்தி சக்திகள் மரியாதை பெற வேண்டும் என்பதுதான்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.