
இலக்கியா டிக் டாக் மூலம் பிரபலமானவர். சினிமாவில் வாய்ப்பு தேடி ஏமாற்றங்களை சந்தித்து, அதன் பின்னர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர்ந்து வந்தார். சமீபமாக சமையல் வீடியோக்கள் வெளியிட்டு வந்த நிலையில், திடீரென அவரது ஸ்டோரியில் ஒரு அதிர்ச்சித் தகவல் பகிர்ந்தார். தனது சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனே காரணம் என கூறினார்.

தன்னை நம்ப வைத்து ஏமாற்றியதாகவும், ஆறு ஆண்டுகளாக அவருடன் இருந்ததாகவும் குறிப்பிட்டார். திலீப்புக்கு பல பெண்களுடன் தொடர்புகள் இருந்ததாகவும், அதை கேள்வி கேட்டதால் அடித்ததாகவும் கூறியிருந்தார். திலீப்பின் புகைப்படத்துடன் இந்த குற்றச்சாட்டுகளை வெளியிட்டு, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார். இதனைத் தொடர்ந்து, அவர் அதிக அளவு ஊட்டச்சத்து மாத்திரைகளை எடுத்ததால் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தற்கொலை முயற்சியா அல்லது விபத்தா என்பதைப் போலிஸார் விசாரித்து வருகின்றனர். சில மணி நேரங்களில் “எல்லாமே போலி செய்தி” என இலக்கியா மறுபடியும் ஸ்டோரியில் பதிவிட்டதால் குழப்பம் அதிகரிக்கிறது. உண்மையில் அவர் தற்கொலை செய்ய முயன்றாரா, அல்லது இதையெல்லாம் வதந்தியாக உருவாக்கியதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. திலீப் மீது குற்றம் சாட்டிய பின்னர் அதனை மறுக்கும் விதமாக நடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திலீப் சுப்பராயன் தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனின் மகன். புலி, தெறி, ஜில்லா, பீட்சா உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியவர். இயக்குநர் மாரீசனின் “சங்கு சக்கரம்” படத்தில் நடிகராகவும் நடித்துள்ளார். தற்போது இலக்கியாவின் குற்றச்சாட்டால் திரையுலகிலும் சமூக ஊடகங்களிலும் அவரை பற்றிய விவாதம் மேலும் தீவிரமடைந்துள்ளது.