ஒட்டப்பிடாரம்: கடந்த 2 நாட்களில் ஒட்டப்பிடாரம் பகுதியில் வெறி நாய் கடித்து 11 பேர் பாதிக்குப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே வெறிநாய் ஒன்று கடந்த 2 நாட்களில் 11 பேர் கடித்துக் குதறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தியம்புத்தூரைச் சேர்ந்த அந்த 11 பேரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டதாகவும், அப்பகுதியில் சுற்றித் திரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்துச் செல்லுமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.