சென்னை: உடலில் கிருமி தொற்று ஏற்படும்போது, அதை எதிர்த்து போராடும் உடல் எதிர்ப்பு சக்தியின் போராட்டமே காய்ச்சல் எனப்படும். இந்த போராட்டத்தின் தன்மையைப் பொறுத்து உடலின் வெப்பம் அதிகரிக்கும். அதாவது, சராசரியாக ஒரு மனிதனின் உடல் வெப்பநிலை 98.4°F (37°C) என்று இருக்க வேண்டும்.
பொதுவாக காய்ச்சலில் பல்வகை உண்டு .டெங்கு ,மலேரியா ,ஃப்ளு ,போன்ற வைரல் காய்ச்சல் உண்டு .இந்த ஒவ்வொரு காய்ச்சல்களுக்கும் ஆங்கில வைத்தியத்தில் பல்வேறு மருந்துகள் உண்டு .ஆனால் எந்த காய்ச்சலாயிருந்தாலும் அது உடனே குறைய சில இயற்கை வைத்தியம் உண்டு .
1.சிலருக்கு அதிக காய்ச்சல் இருக்கும் .காய்ச்சல் இருக்கும்போது, பசிக்காமல் சாப்பிடுவது மிகமோசமான விளைவுகளை உருவாக்கும்.
2.மேலும் காய்ச்சல் இருக்கும்போது தாகம் இல்லாமல் தண்ணீர் பருகுவதும் நல்லதல்ல. எக்காரணம் கொண்டும் உடலின் தேவையைப் புரிந்துகொள்ளாமல் உணவை நாடாதீர்கள்.
3.காய்ச்சல்காரர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும். தாகம் எடுத்தால், வெந்நீரை ஆறவைத்தோ, வெதுவெதுப்பாகவோ பருக வேண்டும். தாகம் இல்லாமல் ஒரு சொட்டு நீர் கூட பருக வேண்டாம்.
4.மேலும் காய்ச்சல் துவக்கநிலையில் இருக்கையில், பசிக்கும்போது, அரிசிக் கஞ்சி, இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
5.காய்ச்சல் இருக்கும்போது இட்லி இடியாப்பத்திற்கு சர்க்கரை தொட்டுக் கொண்டால் நல்லது. குழம்பு, சட்னிகளைத் தவிர்க்க வேண்டும்.
6.காய்ச்சல் உயர்ந்து பின்னர் இறங்கும். அந்த நிலையில் பசிக்கும்போது, இரசம் ஊற்றி சோற்றை நன்கு கரைத்து உட்கொள்ளலாம்.