இனிப்பு சோளம் எனப்படும் ஸ்வீட் கார்ன், பலராலும் விரும்பப்படும் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இதில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற பல முக்கியமான கூறுகள் உள்ளன. இது ஆரோக்கியம் மேம்பட உதவினாலும், இதில் இருக்கும் இயற்கை சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சற்று கவனமாக அணுக வேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக அதிகளவில் சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவில் உயர்வை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

அதனால்தான், நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்வீட் கார்னை எந்த அளவுக்கு, எந்த நேரத்தில், எந்த உணவுகளுடன் சேர்த்து எடுத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். வதக்காமல் வேகவைத்து, லீன் புரோடீன் அல்லது நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும் போது, இது இரத்தத்தில் சர்க்கரையின் உறிஞ்சுவதை மெதுவாக்கும். மேலும், இதில் காணப்படும் லுடீன் மற்றும் zeaxanthin போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை பாதுகாக்கும் தன்மையுடையவை.
இனிப்பு சோளத்தின் GI மதிப்பு சுமார் 52-55 ஆக இருப்பதால், இது குறைந்த முதல் மிதமான வகைக்கு உட்பட்டதாகவே கருதப்படுகிறது. இதன் மூலம் ரத்த குளுக்கோஸ் அளவுகளில் திடீர் உயர்வுகள் ஏற்படாது. ஆனால், கேன்ட் கார்ன் மற்றும் சில பதப்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் அதிகமான சக்கரை மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால் அவை தவிர்க்கப்பட வேண்டும். மிதமான அளவில் நன்கு வேகவைத்த இனிப்பு சோளம் உணவுக்கட்டமைப்பில் சேர்க்கப்படும் போது, இது ஒரு நல்ல தேர்வாக இருக்கக்கூடும்.
அதனால்தான், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவைப் புரிந்துகொண்டு, சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான துணை உணவுகளுடன் சர்க்கரையை உட்கொள்ளும்போது, உணவைத் தவிர்க்காமல் ஸ்வீட் கார்ன் போன்ற சுவையான உணவுகளை அவர்கள் அனுபவிக்க முடியும். உணவின் மூலாதாரத்தை புரிந்து கொண்டு அதனை சமநிலையில் எடுத்துக்கொள்வதே நீரிழிவை சீராக வைத்திருக்கும் நுட்பம்.