புது டெல்லி: டெல்லியில் நடந்த காங்கிரஸ் சட்ட மாநாட்டில் பேசிய கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “2024 தேர்தலில் பாஜக 400 இடங்களை வென்றிருந்தால், அவர்கள் அரசியலமைப்பை மாற்றியிருப்பார்கள்.
ஆனால் மக்கள் அவர்களுக்கு சரியான அடி கொடுத்தனர். இது காங்கிரஸின் சாதனை. இதற்கான பெருமை ராகுல் காந்தியையே சாரும். அரசியலமைப்பைக் காப்பாற்ற அவர் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் நடந்த தேர்தல் முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள் இப்போது எங்களிடம் உள்ளன. மகாராஷ்டிராவில் ஒரு சிறிய அறையில் ஒன்பது வாக்காளர்களும், ஒரு ஹோட்டலில் ஒன்பதாயிரம் வாக்காளர்களும் எப்படி இருக்க முடியும்?
இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது தேர்தல் ஆணையமா அல்லது மோடியின் கைப்பாவையா? அவர் இப்படிப் பேசினார்.