சண்டிகர்: காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் சூறையாடப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்பியுமான அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார்.
சண்டிகர் பா.ஜ.க. அலுவலகத்தில் நடந்த மாநாட்டில், அனுராக் தாக்கூர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, 2014ல் ஆட்சிக்கு வந்தபோது, 12ல் 11 வங்கிகள் நஷ்டத்தில் இருந்தன. மூடப்படும் தருவாயில் இருந்த 12 வங்கிகளும் இன்று நிகர லாபத்தில் உள்ளன. எஸ்.பி.ஐ., வங்கியின் லாபம் மட்டும் ரூ.60,000 கோடியை எட்டியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது, அவர்களின் ஆட்களின் நலனுக்காக வங்கிகள் சூறையாடப்பட்டன.
முத்ரா யோஜனா
இன்று ஏழைகளின் நலனுக்காக முத்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளில் காங்கிரஸ் கொடுத்ததை விட அதிகமாக கொடுத்துள்ளோம் என்பது ரயில்வே பட்ஜெட்டை பார்த்தால் தெரியும். எங்கள் ஆட்சியில் சாலை, ரயில்வே, கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு வளர்ந்த நாடு புதிய சகாப்தத்தை உருவாக்குவதன் மூலம் வளர்ந்த நாடாக மாற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.