ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா, இன்று அமலாக்கத்துறை (ED) முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தவில்லை. கேமிங் ஆப்புகள் மட்டுமே விளம்பரமாக செய்தேன்,” என்றார்.

அவர் விளக்கமளித்த முக்கிய அம்சங்களில் ஒன்று, கேமிங் செயலிகள் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டவை என்பதையும், அவை கிரிக்கெட், ஒலிம்பிக் உள்ளிட்ட தேசிய விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளிக்கின்றன என்றும் கூறினார்.
வழக்கில் உள்ள ஏனைய பிரபலங்களாக பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி உள்ளிட்ட 29 பேரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. விஜய் தேவரகொண்டா தனது வங்கி மற்றும் ஸ்பான்சர் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து, விசாரணையில் அதிகாரிகள் திருப்தியடைந்ததாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.