சென்னை: சென்னையின் முதல் குளிர்சாதன மின்சார பேருந்து ஆகஸ்ட் 11-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 55 குளிர்சாதன மின்சார பேருந்துகள் இயக்கப்படும். பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 80 சாதாரண மின்சார பேருந்துகளும் இயக்கப்படும். 5 பணிமனைகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 625 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் 5 பணிமனைகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 625 மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக, 120 மின்சார பேருந்துகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூன் 30 அன்று சென்னையில் உள்ள வியாசபாடி பணிமனையில் அடுத்த கட்டமாக, பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து மின்சார பேருந்துகளின் சேவை தொடங்கப்படும். இது குறித்து, சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பிரபு சங்கர் கூறியதாவது:-
வியாசபாடி பணிமனையில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அடுத்து, பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 55 குளிர்சாதன மின்சார பேருந்துகளையும், 80 சாதாரண மின்சார பேருந்துகளையும் இயக்க முடிவு செய்துள்ளோம். இந்த பேருந்துகளின் சேவை ஆகஸ்ட் 11 முதல் தொடங்கப்படும். மற்ற பணிமனையில் இருந்தும் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.